என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நகை பணம் கொள்ளை"
பாகூர்:
தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கம் பங்கஜம் நகரை சேர்ந்தவர் பலராமன். இவரது மனைவி அஞ்சலைதேவி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.
இதில் 2 மகன்கள் வெளி நாட்டில் வேலை செய்து வருகின்றனர். பலராமன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அஞ்சலைதேவி தனது மற்றொரு மகனான சாப்ட்வேர் என்ஜினீயரான முரளியுடன் வசித்து வந்தார். நேற்று இரவு அஞ்சலைதேவி வீட்டின் கீழ் தளத்திலும், முரளி தனது மனைவியுடன் வீட்டின் மாடியிலும் தூங்கினர்.
நள்ளிரவில் மர்ம வாலிபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அங்கிருந்த 3 பீரோக்களை உடைத்து பார்த்துள்ளனர்.
அதில் நகை- பணம் எதுவும் இல்லாததால் பூஜை அறைக்குள் புகுந்தனர். அங்கிருந்த பீரோ லாக்கரை உடைத்து அதில் இருந்த 12 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்தனர்.
பின்னர் வீட்டு வராண்டாவில் தூங்கிக் கொண்டு இருந்த அஞ்சலைதேவி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயினையும் பறித்தனர். இதனால் திடுக்கிட்டு எழுந்த அஞ்சலைதேவி திருடன்... திருடன் என கூச்சலிட்டார்.
தாயார் அலறல் சத்தம் கேட்டு அவரது மகன் முரளி மாடியில் இருந்து கீழே இறங்கி வருவதற்குள் கொள்ளையர்கள் வயல் வெளியில் புகுந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை பதிவு செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபோன்று திருட்டு, கொள்ளை சம்பவம் இப்பகுதியில் அடிக்கடி நடப்பதாகவும், இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணி மேற் கொள்ளாததால் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுகனேஸ்வரன். லாரி டிரைவர். இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்களுக்கு 2 குழந்கைகள் உள்ளனர். இவர்கள் நேற்று இரவு வீட்டின் கீழ் தளத்தில் கதவை பூட்டி விட்டு மேல் தளத்தில் தூங்கி கொண்டிருந்தனர்.
இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் அங்கு வந்து வீட்டின் கீழ் தள முன்பக்க கதவை கடப்பாரையால் நெம்பி உடைத்து உள்ளே புகுந்து நகை, பணம் இருக்கிறதா? என தேடினார்கள். பீரோவை திறந்து பார்த்தனர். அதில் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து ஒரு இரும்பு பெட்டியை எடுத்து உடைத்து பார்த்தனர்.
அதில் வீட்டின் பத்திரம், 3½ பவுன் நகை, ரூ.1000 ரொக்கம் ஆகியவை இருந்தது. இதில் பணத்தையும், நகையையும், திருடிக் கொண்டு மர்மநபர்கள் அங்கிருந்து வெளியேறி பக்கத்து தெருவுக்கு சென்றார்கள். அங்கு 2 வீடுகளின் கதவை உடைக்க முயற்சி செய்துள்ளனர். கதவு தடிமனாக இருந்தால் உடையவில்லை. இதனால் மர்மநபர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்